மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும்
நிலையில், தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் மாநில நீர்வளக் குழுவின் துணைத் தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் மாநில நீர்வளக் குழுவின் துணைத் தலைவர் பதவி காலியானது.
மாநில நீர்வளக் குழுவின் துணைத் தலைவர் பதவிக்கான அரசாணை அக்டோபர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இதுவரை நியமனம் நடைபெறவில்லை என்றும்,
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழகத்தின் சார்பில் தொழில்நுட்ப ரீதியாக வாதங்களை முன்வைக்கும் முக்கியப் பதவியை நிரப்புவதில் நீர்வளத்துறை ஏன் தாமதம் எனவும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்த விவகாரத்தில் உடனடியாக நியமனம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
















