“முதலமைச்சருக்கு அரோகரா” என கோஷம் எழுப்பியது ஆணவத்தின் உச்சம் என திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், “முதலமைச்சருக்கு அரோகரா, அமைச்சருக்கு அரோகரா என்ற கோஷத்தை இதுவரை திருச்செந்தூரில் யாரும் எழுப்பியதாக சரித்திரம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்த புதிய கலாசாரம் தவெக அரசால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
















