மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் சந்தேக நபரின் குடும்பத்தினரை போலீசார் வீட்டுக்காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் கொள்ளையில் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் நிஷாந்த் என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பழங்காநத்தத்தில் உள்ள அவரின் வீட்டில் தெற்கு துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான காவல்துறையினர் பல மணி நேரம் சோதனை நடத்தியதோடு குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக நிஷாந்தின் குடும்பத்தினரை வீட்டுக்காவலில் வைத்த போலீசார் அவர்களிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
















