திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோயிலை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக் கோரி, இந்து தர்ம பரிஷத் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதற்கு பதிலளித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், 1923-ம் ஆண்டு தீர்ப்பின்படி மலையின் முழு உரிமையும் கோயிலுக்கே சொந்தம் என்றும், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொல்லியல் துறையின் பாதுகாப்பு என்பது மலையில் உள்ள பாறைச் சிற்பங்கள், கல்வெட்டுகள் அடங்கிய 50 சென்ட் பகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கோவில் நிர்வாகத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க சட்டத்தில் இடமில்லை என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
















