கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா தம்பதி விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
முன்னணி இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும் இடையே கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் கிரீஸ் நாட்டில் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமண விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில், திருமணக் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்ட புதுமணத் தம்பதி அனிருத் மற்றும் காவ்யா விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
அப்போது அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சக பயணிகள் இருவருக்கும் வாழ்த்துகளை கூறினர்.
















