டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்திற்குச் சென்றார்.
அங்கு அவரைச் சந்தித்துப் பேசிய ஆளுநர், சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















