வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் - சிறப்பு தொகுப்பு!
Nov 14, 2026, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 14, 2026, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி வர்த்தகம் நிறுத்தப்பட்டிருந்தாலும், இந்தியப் பொருட்களை மூன்றாம் நாடுகள் மூலம் பாகிஸ்தான் இறக்குமதி செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது. 4 மாதங்களில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய பொருட்களை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2025ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியா, பாகிஸ்தானுடனான நிலப்பரப்பு வர்த்தகப் பாதையான வாகா-அட்டாரி எல்லையை மூடியது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்துவதாக அறிவித்தது.

பாகிஸ்தான் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கான தேவை குறையாததால், உள்நாட்டுப் பொருளாதாரத் தேவைகள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாகவும் மூன்றாம் நாடுகள் வழியாக இந்தியப் பொருட்களை பாகிஸ்தான் தொடர்ந்து வாங்கி வருகிறது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்யும் பொருட்களில் 96 சதவீதம் மருந்துப் பொருட்கள் மற்றும் கரிம வேதிப்பொருட்கள் ஆகும்.

அட்டாரி-வாகா நிலவழி எல்லை மூடப்பட்டு நேரடி வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளதால், இந்தியப் பொருட்கள் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் துறைமுகங்கள் வழியாகப் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அந்த மூன்றாம் நாடுகளில் உள்ள வர்த்தக மையங்களில் இந்தியப் பொருட்களின் ஆவணங்கள் மற்றும் பேக்கேஜிங் மாற்றப்பட்டு, அங்கிருந்து சட்டப்பூர்வமாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக வர்த்தக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்

ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் வரை இத்தகைய மறைமுக வர்த்தகம் நடைபெறுவதாக உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

பாகிஸ்தானின் மருந்துத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை ஐரோப்பா அல்லது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதை விட, இந்தியாவிலிருந்து பெறுவது மிகவும் மலிவானதாகவும் விரைவானதாகவும் உள்ளது

எனவே உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, பாகிஸ்தான் அரசு சில குறிப்பிட்ட இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய மறைமுகமாகவோ அல்லது சிறப்பு அனுமதிகள் மூலமாகவோ வழிவகை செய்துள்ளது.

இதில் மனிதர்களுக்கான தடுப்பூசிகள், இரத்தப் பொருட்கள் மற்றும் மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் ஆகியவை முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக மனிதர்களுக்கான தடுப்பூசிகளின் இறக்குமதி 11.1 மில்லியன் டாலரிலிருந்து 32.3 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூருக்கு முன் பாகிஸ்தானுக்கு மருந்துப் பொருட்களை வழங்கும் நாடுகளில் பெல்ஜியதுக்குப் பின் இரண்டாவது இடத்தில் இந்தியா இருந்தது. மருந்து பொருட்கள் மட்டுமின்றி பிளாஸ்டிக், பெட்ரோலியப் பொருட்கள், சாயங்கள் மற்றும் கரிம இரசாயனங்கள், ரப்பர், காபி, தேயிலை, காய்கறிகள், மசாலாப் பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் நொறுக்கப்பட்ட தானியங்கள் ஆகிய பொருட்களையும் இந்தியாவில் இருந்து மூன்றாம் நாடுகள் மூலமாக பாகிஸ்தான் இறக்குமதி செய்து வருகிறது.

இந்தியப் பொருட்களின் பாகிஸ்தான் இறக்குமதி சுமார் 69 சதவீதம் அதிகரித்துள்ளது. 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 5,876 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியப் பொருட்களைப் பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது.

ஆனால் இருநாடுகளுக்கும் இடையே நேரடி வர்த்தகம் நிறுத்தப் பட்ட பின், பாகிஸ்தானில் இருந்து எந்த இறக்குமதியையும் இந்தியா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: indian goodsIndia Pakistan TradePakistan’s importsPakistan imported Indian goods
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வரில் கோளாறு – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்!

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த உதயநிதி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies