பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் - சிறப்பு தொகுப்பு!
Nov 14, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 14, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாபில் வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களைச் செய்வதற்கான சதி வேலைகளில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் சீக்கிய புனிதத் தலங்கள் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்படுவதாக இந்திய உளவுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

லாகூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க Gurdwara Chhevin Patshahi Sri Guru Hargobind Sahib குருத்வாரா 1947ம் ஆண்டு பிரிவினைக்கு பிறகு சுமார் 79 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.

லாகூரின் Temple சாலையில் அமைந்துள்ள இந்த குருத்வாராவை புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு கடந்த நவம்பர் எட்டாம் தேதி பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான ரமேஷ் சிங் அரோரா வழிபாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் பழைய நகரத்தில் சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராம் தாஸ் ஜியின் பிறப்பிடமான சுனா மண்டி பஜாரில் அமைந்துள்ள Gurdwara Janam Asthan Guru Ram Das Ji என்ற குருத்வாராவை விரிவுப்படுத்தப்போவதாக அரசு அறிவித்த 30 நாட்களுக்குளேயே இந்த திறப்பு விழா நடத்தப் பட்டுள்ளது.

மேலும் சீக்கிய மதப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், யாத்ரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட குருத்வாராக்கள் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் அந்நாட்டு உளவுத் துறையான ISI இருப்பதாகவும், இந்தியாவில் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டுவதற்காகவே குருத்வாராக்கள் விரிவுபடுத்தப்படுவதாக இந்திய உளவுத்துறையால் கண்காணிப்புக்குள் கொண்டுவரப் பட்டுள்ளன.

மத சுற்றுலா மற்றும் யாத்திரை வழித்தடங்களைப் பயன்படுத்தி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் சீக்கியர்களிடையே தனது செல்வாக்கை வளர்க்கவும், குருத்வாராவுக்கு வரும் வெளிநாட்டு சீக்கியர்களின் நெட்வொர்க்கைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., முயற்சி செய்வதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்கள், புனித யாத்திரை வழித்தடங்கள் மற்றும் மதக் கூட்டங்களைப் பயன்படுத்தி, இந்தியாவிலிருந்து வரும் பார்வையாளர்களுடன் முதற்கட்டத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதாகவும், அதன் பிறகு சமூக ஊடகத் தளங்கள் வழியாக encrypted டிஜிட்டல் முறையில் தொடர்பை வளர்த்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும், எல்லை தாண்டி வரும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கையாள்வதற்காக, உள்ளூர் நபர்களுக்கு 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்கப்படுவதாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் சீக்கிய சமூக வலைப்பின்னல்கள் வழியாகப் பிரிவினைவாதக் கருத்துகளைத் தூண்டவும், நிதி திரட்டவும் இந்தியா மீது தொடர்ச்சியான அரசியல், சட்ட மற்றும் பொருளாதார அழுத்தத்தை உருவாக்கவும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களை சர்வதேசக் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், அந்தந்த நாடுகளில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கவும் பாகிஸ்தானின் ISI முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

வணிக ரீதியான அதிக எடை சுமக்கும் ட்ரோன்கள் மூலம் நவீன ஆயுதங்கள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களைப் பஞ்சாப் மாநிலத்துக்குள் கடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பஞ்சாப் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படைகள் இணைந்து பல்வேறு பயங்கரவாத மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பல்களைக் கண்டறிந்து முறியடித்துள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, யாத்திரைக்கு வரும் இந்தியர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, பிரிவினைவாதக் கருத்துகளைத் தூண்டவும், இந்தியாவின் பாதுகாப்பு கவனத்தைத் திசைதிருப்பவும் பாகிஸ்தான் சார்ந்த அமைப்புகள் திட்டமிடலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Tags: lahoreisiPakistan's intelligence agencySikh holy sitesGurdwara Chhevin Patshahi Sri Guru Hargobind Sahib
Share
Tweet
SendShare
Previous Post

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Related News

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies