பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திடீரென கைவிடுவது ஏன் ?; என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது
அரசுப் பணம் செலவிடப்பட்டுள்ள நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பாதியில் கைவிட்டதை எதிரித்து சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் கெளதமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தொழில்நுட்ப ஆய்வுகள் உள்பட அனைத்து ஆய்வுகளும் நடத்திய பிறகு திடீரென பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவது ஏன் ? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது
அப்போது விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் நீர்நிலைகள் விவசாய நிலங்கள் அமைந்துள்ளதால் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது சிக்கலானது எனவும் இது தொடர்பான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது
தமிழக அரசின் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தது
















