தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் அன்பில் மகேஸ் உள்ளிடோரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக்கூறி 400 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், அவரது மேலாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் அன்பில் மகேஸ் கடந்த மாதம் 26ம் தேதி கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரையும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரி, மத்திய குற்றப் பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், பள்ளி நிர்வாகிகளிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது யார்? –
தனியார் பள்ளிகளிடமிருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? –
வசூலிக்கப்பட்ட பணம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது ? என்பது குறித்து அன்பில் மகேஸ் உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















