திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து தவெக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆலோசித்து வருவதாக வெளியான தகவல், இந்து அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் 24ஆம் தேதி மட்டும் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்ததுடன், இதுகுறித்த அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இடைக்கால உத்தரவின்படி தீபத் தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசின் அணுகுமுறையை தவெக அரசும் பின்பற்றக் கூடாது எனவும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
















