தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு விருது வழங்கியதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2026-ல் இசைத் துறையில் சிறந்த பங்களிப்பிற்காகக் கௌரவிக்கப்பட்ட நமது அன்பிற்குரிய இசைஞானிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக எங்களது மகிழ்ச்சி, சோகம் மற்றும் தனிமை என அனைத்து தருணங்களிலும் உங்கள் இசையே துணையாக இருந்து வருகிறது. எந்த விருதாலும் உங்கள் இசை மேதைமையை அளவிட முடியாது என்றாலும், இந்த அங்கீகாரம் ஒவ்வொரு இசை ரசிகனின் நெஞ்சத்தையும் பெருமையால் நிறைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
















