2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? - சிறப்பு தொகுப்பு!
Nov 22, 2026, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 22, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம் மக்கள்தொகை 57சதவீதம் அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவை சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம் ‘உலக மதங்களின் எதிர்காலம்: மக்கள் தொகை வளர்ச்சி கணிப்புகள், 2020–2070’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

201 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வயது, கருவுறுதல், இறப்பு, இடம்பெயர்வு மற்றும் மதம் மாறுதல் குறித்த தரவுகளைப் பயன்படுத்தி ஏழு மதப் பிரிவுகளை இந்த மையம் ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 2020 முதல் 2070-ஆம் ஆண்டுக்குள் 80 சதவீதம் அதிகரிக்கும் என்றும், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட மதமான கிறிஸ்துவத்தை பின்னுக்குத் தள்ளி, 2035-க்குள் இஸ்லாம் முதலிடத்தை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2070-க்குள் பாகிஸ்தானை அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2020 முதல் 2070 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 17.6 கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் பங்கு 79 சதவீதத்திலிருந்து 76 சதவீதமாகக் குறையக்கூடும் என்று கூறப் பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள்தொகை 21.3 கோடியிலிருந்து 33.4 கோடியாக சுமார் 12.1 கோடி அதிகமாகும் என இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் பங்கு சுமார் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.

முஸ்லிம் பெண்கள் மத்தியில் கருவுறுதல் விகிதம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், ஆனால் இந்து மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு இடையிலான கருவுறுதல் விகித இடைவெளி தொடர்ந்து சுருங்கி வருவதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம் குறைந்திருந்தாலும், இந்துப் பெண்களை விட முஸ்லிம் பெண்கள் சராசரியாக அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் நிலை தொடர்வதாக இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

குறிப்பாக முஸ்லிம் மக்கள்தொகை ஒப்பீட்டளவில் வேகமாக வளர்வதற்கு அச்சமூகத்தின் இளைய வயது அமைப்பும் ஒரு முக்கியக் காரணமாகும் எனவும், 2020-ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்திய இந்துக்களின் சராசரி வயது 29 ஆக இருந்த நிலையில், முஸ்லிம்களின் சராசரி வயது 24 ஆக இருந்ததாகவும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

வெவ்வேறு மதங்களை சேர்ந்த பெண்கள் ஒரே எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினாலும், கடந்த கால கருவுறுதல் விகித வேறுபாடுகளின் தாக்கம் இன்னும் பல தசாப்தங்களுக்குத் தொடரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, இந்தியாவின் இந்து மக்கள் தொகையை விட முஸ்லிம் மக்கள் தொகை தொடர்ந்து வேகமாக வளரும் என்று இந்த ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை தொடர்பான அனுமானங்களின் அடிப்படையில் அமைந்த இந்த அறிக்கை வெறும் கணிப்புகள் மட்டுமே; அவை நிச்சயமாக நடக்கப்போகும் நிகழ்வுகள் அல்ல என்பது குறிப்பிட்டத்தக்கது.

Tags: ChristianityMuslim population in IndiaThe Future of World Religions: Population Growth Projectionsglobal Muslim populationhindus in indiahindus population
Share
Tweet
SendShare
Previous Post

தங்கம் இறக்குமதி தொடர்பான பிரதமரின் வேண்டுகோளை தீவிரமாக மக்கள் எடுத்துக்கொண்டனர் – பியூஷ் கோயல்

Related News

தங்கம் இறக்குமதி தொடர்பான பிரதமரின் வேண்டுகோளை தீவிரமாக மக்கள் எடுத்துக்கொண்டனர் – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற சொன்னால், தவெக அரசுக்கு ஏன் எரிகிறது? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கடந்த 12 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் – அமித் ஷா பெருமிதம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இந்துக்கள் போராட வருமாறு இந்து முன்னணி அழைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் – தமிழக அரசு சீராய்வு மனுதாக்கல்!

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில்  இளையராஜாவுக்கு விருது – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு புதிய கட்டுப்பாடுகள் – திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை!

காசிமேடு மீனவர் சங்கத்தினர் 4-வது நாளாக போராட்டம் – வெறிச்சோடிய மீன் கடைகள்!

கோவை, காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் – முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் உத்தரவு – சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம் என தகவல்!

சபரிமலையில் குவியும் பக்தர்கள் – தினசரி தரிசன அனுமதி 85000 ஆக அதிகரிப்பு!

தமிழக அரசு சமர்ப்பித்த வரலாற்று தரவுகளால் வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத அவகாசம் வழங்கியுள்ளது – தேனி மாவட்ட ஆட்சியர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிகழ்ச்சிகளில் ஆன்மிகம் சாராத கோஷங்களுக்கு தடை!

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு சோதனை – ராஜஸ்தானில் வெற்றிகரமாக பரிசோதனை!

12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies