பாகிஸ்தானில் ராஜமரியாதையுடன் சொகுசு வாழ்க்கை : தாவூத் இப்ராஹிம் பற்றி FBI முன்னாள் உளவாளி அதிர்ச்சி தகவல் - சிறப்பு தொகுப்பு!
Nov 23, 2026, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் ராஜமரியாதையுடன் சொகுசு வாழ்க்கை : தாவூத் இப்ராஹிம் பற்றி FBI முன்னாள் உளவாளி அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2026, 07:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் ரகசிய வாழ்க்கை குறித்து முன்னாள் FBI ஏஜென்ட் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சிறுவயதில் மாணவர் அரசியலில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த Kamran Faridi 1990-களில் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று சுமார் 25 ஆண்டுகள் FBI-ன் ரகசிய உளவாளியாக பணியாற்றியுள்ளார்.

2020-ல் FBI உயரதிகாரிகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் மோதல்கள் காரணமாக அமெரிக்க நீதிமன்றத்தால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட Kamran Faridi விடுதலைக்குப் பிறகு 2024-ல் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு தற்போது தனது மனைவியுடன் தாய்லாந்தில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் AajTak Radio உடனான பிரத்யேக பாட்காஸ்ட் நேர்காணலில், பாகிஸ்தானின் ISI மற்றும் தாவூத் இப்ராஹிமின் D-Company உட்பட லஷ்கர்-இ-தொய்பா போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடனான தனக்கான தொடர்புகள் குறித்து பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான துரந்தர் திரைப்படத்தில் ‘படே சாஹப்’ என்ற பெயரில், இந்திய உளவாளியின் சதியால் முடக்கப்பட்டு, பழைய செல்வாக்கை இழந்தவராக நோய்வாய்ப்பட்டு, பேசக்கூடச் சிரமப்படும், படுத்த படுக்கையான முதியவராக தாவூத் சித்தரிக்கப்பட்டிருந்தார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு வட்டாரங்களில், Bade Saab மற்றும் Bade Waale என்று தாவூத் அழைக்கப்படுவதை உறுதிபடுத்தியுள்ள Kamran Faridi, ஆனால் 70 வயதிலும் படுக்கையில் முடங்கி விழாமல் தாவூத் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து கொண்டு தனது D-Company மற்றும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை இன்றும் நேரடியாக நிர்வகித்து வருவதாகவும் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் உளவுத் துறையான ISI பாதுகாப்புடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும், தன்னைவிட மிகவும் இளைய வயது பெண் ஆயேஷா பாபியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு இரவு நேர விருந்துகளிலும், அரசியல் மற்றும் வணிகக் கூட்டங்களிலும் பங்கேற்பதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் சாதாரண வீடு போலத் தோற்றமளிக்கும் 22 Zamzama என்ற இடத்தின் அடித்தளத்தில் பலத்த பாதுகாப்பு மற்றும் Soundproof வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இரவு விடுதியில் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் அமர்ந்து தாவூத் இப்ராஹிம் Mujra நடன நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், முக்கிய வணிக ஆலோசனைகளை நடத்துவதும் வழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்த தாவுத், தற்போது கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பதாகவும், தாவூதின் மருமகனான அலிஷா, தனது முதல் மனைவி மெஹ்ஜபீன் இருக்கும்போதே, தாவூத் ஒரு பாகிஸ்தானி பதான் இனப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக NIA -விடம் கூறியதாவும் தெரிவித்துள்ளார்.

2009-ல், தாவூத்தின் கும்பலுக்குள் ஊடுருவும் பணியை ஒப்படைத்ததும் தனது பாகிஸ்தான் அடையாளத்தை மறைத்த Kamran Faridi, ஒரு ரஷ்ய மாஃபியா கும்பலைச் சேர்ந்தவராக மாற்றிக்கொண்டு தாவூத்தின் வலது கையாகச் செயல்படும் ஜாபிர் மோதிவாலா மூலமாகவே தாவூத்திடம் அறிமுகம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

2018-ல் லண்டனில் ஜாபிர் கைது செய்யப்பட்டதற்கு தாம் முக்கியக் காரணமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள Kamran Faridi, கராச்சியில் தான் ‘டி-கம்பெனி’க்காகப் பணியாற்றியதாகவும், அதன் ‘ஹவாலா’ பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை அமைக்க உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராஹிமின் மகனான அலி காஸ்கர் தான், தனக்குத் தேவையான பல உள்விவரங்களை வழங்கியதாக குறிப்பிட்டுள்ள Kamran Faridi, கராச்சியின் மிகவும் பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றில் வசித்தாலும், தாவூத் மிகுந்த அச்சத்துடன் கூடிய வாழ்க்கையையே வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.

பகல் நேரங்களில் வெளியே தலைகாட்டாமல் இரவு 10 மணிக்கு மேல் மட்டுமே வெளியே வரும் தாவூத் விடியற்காலை தொழுகைக்கு முன்பே வீட்டிற்குத் திரும்பி விடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் அதிக ஆபத்துள்ள ராணுவப் பணிகளில் ஆற்றல் பெற்ற பாகிஸ்தானின் உயரடுக்கு சிறப்பு சேவை குழுவைச் சேர்ந்த சுமார் 45 காவலர்கள் AK-47 ரக துப்பாக்கிளுடன் தாவூத்தை 24 மணி நேரமும் பாதுகாத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1993 குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான ISI உடன் தொடர்பில் இருக்கும் சோட்டா ஷகீல் தான், தாவூத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதாகவும் பாதுகாப்பு அறிக்கைகளுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ISI தலைமையகத்திற்குச் சென்று வருவதாகவும் கூறியுள்ளார்.

தாவுத்தின் சகோதரர்களான ஷகீல் மற்றும் அனீஸ் இப்ராகிம் ஆகியோருக்கு இடையே, அடுத்த வாரிசு யார் என்பது குறித்த அதிகாரப் போட்டி நிலவுவதாகவும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் Kamran Faridi குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக தாவூத் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றபோது, மும்பையைச் சேர்ந்த ‘இஸ்லாம் பாபா’ என்ற பக்கிரியையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாகவும் எந்தவொரு பெரிய குற்றச் செயலையும் முக்கிய முடிவையும் இஸ்லாம் பாபாவின் அனுமதி இல்லாமல் தாவூத் எடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: former FBI agentKamran Faridipakistandawood ibrahimkarachiUnited StatesU.S. court
Share
Tweet
SendShare
Previous Post

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – அண்ணாமலையார் கோயில் வண்ண மலர்களால் அலங்கரிப்பு!

Related News

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – அண்ணாமலையார் கோயில் வண்ண மலர்களால் அலங்கரிப்பு!

திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

பிஸ்லெரி குடிநீர் மாதிரிகளில் புரோமேட் வேதிப்பொருள் அதிகம் இருப்பது கண்டுபிடிப்பு – சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி!

இன்றைய தங்கம் விலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீப திருவிழா – பஞ்சலோக தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 % வரி அல்லது தற்காலிக தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை – விலையை குறைக்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானில் ராஜமரியாதையுடன் சொகுசு வாழ்க்கை : தாவூத் இப்ராஹிம் பற்றி FBI முன்னாள் உளவாளி அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போ இசிட்ரோ கைது – வன்முறையில் 11 பேர் பலி!

முசிய அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 8 பேர் பலி – பிரதமர், முதல்வர் இரங்கல்!

திமுக பாதையில் தவெக அரசு சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் தீபம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் உறுதி!

2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தங்கம் இறக்குமதி தொடர்பான பிரதமரின் வேண்டுகோளை தீவிரமாக மக்கள் எடுத்துக்கொண்டனர் – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற சொன்னால், தவெக அரசுக்கு ஏன் எரிகிறது? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies