கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சிக்கு தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது
திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அதிகாலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையடுத்து, மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு தீபக் கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 20 ஊழியர்கள் 9 மணி நேரம் சுமந்து சென்று தீப கொப்பரையை மலை உச்சியில் நிறுத்தினர். இதையடுத்து, தீப கொப்பரைக்கு கற்பூரம் ஏற்றி அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.
















