திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலை உச்சியில் அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் சுவாமி மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில், தீபத் திருவிழாவை ஒட்டி, அதிகாலையில் சுவாமி சன்னதி எதிரே பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாலையில், தங்கக் கொடிமரம் முன்பாக அகண்ட தீபம் ஏற்றப்பட்டு, விழாவின் சிகர நிகழ்வாக இரண்டாயிரத்து 668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 48 நாட்கள் விரதமிருந்த பருவத ராஜகுல மக்கள் மலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றினர்.
















