திருப்பரங்குன்றம் விவகாரத்தையொட்டி நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், பெருமாள்புரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் வீட்டைச் சுற்றி 40க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதேபோல், பழனியில் இந்து முன்னணி கோட்டச் செயலாளர் பாலன், பாஜக இளைஞரணித் துணைத் தலைவர் கமலேஷ் உட்பட தமிழகம் முழுவதும் 480 பேர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தீபம் ஏற்றும் விவகாரத்தில் முதல்வர் விஜய் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
















