திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, தீபமேற்ற வேண்டும் என முருக பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் எதிர்பார்த்த நிலையில், தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்தநிலையில், 25ம் தேதி காலை 10 மணி வரை மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, மதுரை மாவட்ட எல்லைக்குள் பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் மக்கள் கூடுவதற்குத் தடை விதித்துள்ளார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலையில் மக்கள் ஏறிச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிகாரியிடம் அனுமதி பெற்று நிபந்தனைகளுடன் நடத்தப்படும் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், மேலும், திருமண நிகழ்வுகள், இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு விலக்களிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் வழக்கமான சடங்குகள் மற்றும் திருவிழாக்களுக்கும் விலக்கப்பட்டுள்ளது.
















