கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!
Sep 20, 2026, 09:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 4, 2026, 06:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தைப் போன்றே கேரளம், அசாம், புதுச்சேரியிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது. அங்கு அமைதியாக நடந்த தேர்தலில் 79.7 சதவிகித வாக்குகள் பதிவாகின.

மெஜாரிட்டிக்கு 71 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் 5 மணிக்குள் தெரிந்துவிடும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதேபோன்று புதுச்சேரியில் காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 91.23 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக மொத்தம் 6 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டர் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்றிற்கு பிறகு பொது மக்களின் தகவலுக்காக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, AIUDF மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை தேர்தலை எதிர்கொண்டன.

இதில் 85 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. கடந்த 2016 மற்றும் 2021 பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்த நிலையில் என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ASSAM POLL COUNTINGwest bengal assembly electionwest bengal assembly election 2026puducherry electionwest bengal election 2026west bengal assembly election newspondy election
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

Next Post

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies