இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் - சிறப்பு தொகுப்பு!
Sep 19, 2026, 11:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 4, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் முப்படைகளின் மக்கள் தொடர்புத் துறையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி, குர்ஆனை மேற்கோள் காட்டி, இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.

2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்ததில் இருந்தே எல்லை பிரச்னை, பலூசிஸ்தான் பிரச்சனை என பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே மோதலும் போர் பதற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நீண்ட காலமாகவே இந்திய ஆப்கானிஸ்தான் நல்லுறவையும் கேள்விக்குள்ளாக்கி வரும் பாகிஸ்தான் கடுமையான உணவு நெருக்கடிகாலத்தில் வழங்கிய கோதுமை அழுகிய நிலையில் இருந்ததாகவும், மனிதப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லை என்றும் ஆப்கானிஸ்தான் அரசு வெளிப்படையாக குற்றம்சாட்டியது.

அதேசமயம் உயர்தரமான 50,000 மெட்ரிக் டன் அவசரக்கால கோதுமையை வழங்கிய இந்தியாவுக்கு ஆத்மார்த்தமான நன்றியை ஆப்கான் அரசு தெரிவித்தது.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைப்பைச் சீராக்கும்வகையில் ஆப்கானிஸ்தான் சுகாதார அதிகாரிகளுக்கு மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பாக இந்தியா வழங்குவதாக அறிவித்தது.

இந்த உதவியில் நோயறிதல், சிகிச்சை, பச்சிளங்குழந்தை மற்றும் சிறுவர் பராமரிப்புக்கான உபகரணங்கள், அத்துடன் வென்டிலேட்டர்கள், நோயாளி கண்காணிப்புக் கருவிகள், கார்டியோகிராஃப் இயந்திரங்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் தொகுப்புகள், முகத்தாடை மின்வெப்பச் சாதனங்கள் மற்றும் சிறப்பு மருத்துவக் கருவித் தொகுப்புகள் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

உணவுப் பாதுகாப்பு முன்னெடுப்புகள், சுகாதாரம் மற்றும் மருந்து உதவிகள் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதுடன் கல்வி உதவித்தொகைகள் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

குறிப்பாக கடந்த ஜூன் 17 ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கான தனது மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, இந்தியா ஐந்து டன் அத்தியாவசிய மருந்துகளையும் காபூலுக்கு வழங்கியது.

இந்நிலையில், ஆறு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்த ஆப்கானிஸ்தான் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக உள்ள மவ்லவி அட்டவுல்லா ஓமரி (Mawlawi Attaullah Omari) மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை சந்தித்து இருதரப்பு விவசாய ஒத்துழைப்பு ஆப்கானில் கோதுமை உற்பத்தி, விதை தொழில்நுட்பம் மற்றும் நவீன விவசாய முறைகள் குறித்தும் விவாதித்துள்ளார். மேலும் தங்கள் நாட்டின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கான இந்திய தொழில்நுட்ப உதவியை இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் வர்த்தக வாய்ப்புகள் குறித்த தொழில் துறை கலந்துரையாடல் அமர்வில் பேசிய பேசிய ஆப்கான் வேளாண் அமைச்சர் ஓமரி, பல நூற்றாண்டுகளாக தொடரும் இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவுகள் இந்த நூற்றாண்டுக்கே உரியவை என்று கூறியிருந்தார்.

மேலும் இந்தியர்களைச் சொந்த மக்களைப் போல் உணர்வதாகவும், ஆப்கானிஸ்தானியர்களும் இந்தியர்களும் ஒரே மாதிரியான டிஎன்ஏ-வைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆப்கான் அமைச்சரின் DNA கருத்துக்குக் காட்டமாக பதிலளித்துள்ள பாகிஸ்தான் முப்படைகளின் மக்கள் தொடர்புத் துறையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி, குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி, முஸ்லிம்கள் இறைநம்பிக்கையற்றவர்களுடன் நட்பு கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

மேலும் இந்தியாவுடனும் இந்துக்களுடனும் நெருங்கிய உறவைப் பேணும் தாலிபான்கள் உண்மையான முஸ்லீம்களாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் ஆப்கான் தாலிபான்களுக்கும் இடையிலான உறவு ‘எஜமான்-அடிமை’ உறவு போன்றது என்று கூறியுள்ள சௌத்ரி, தாலிபான்கள் இந்தியாவின் நலன்களுக்காகச் செயல்படுவதாகவும் அவர்கள் இந்தியாவின் அடிமைகள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானை பலவீனப்படுத்த ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்நாட்டின் முப்படைகளின் மூத்த இராணுவ அதிகாரியின் இந்தக் கருத்து மேலும் ஆப்கானுடனான பாகிஸ்தானின் உறவை மேலும் சிக்கலாக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Tags: Pakistan's Inter-Services Public RelationsIndia-Afghanistan relationsBalochistan crisis.pakistanAfghanistanTalibanLieutenant General Ahmed Sharif Chaudhry
Share
Tweet
SendShare
Previous Post

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Next Post

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Related News

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies