சிவகங்கை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காளையார் கோவில் பகுதியை சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் அவரது நண்பரான பூப்பாண்டி ஆகியோர் கடந்த 16ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அரசு தரப்பில் நிவாரணம் மற்றும் வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இரட்டைக் கொலை தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலரத வீதியை சேர்ந்த ஆகாஷ், மணிகண்டன், ராஜகோபால், சபரிவேலன், சுபாஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















