ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் - சிறப்பு தொகுப்பு!
Sep 18, 2026, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 18, 2026, 08:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான கட்டிடங்களைச் சேதப்படுத்தியதையும், அழித்ததையும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானின் தாக்குதல்களால் அமெரிக்கப் படைகளுக்கும் அதன் தளங்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்புகள், முன்பு கூறியதை விட மிக அதிகம் என்பதை பென்டகன் ஒப்புக் கொண்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் பிறகு, ஈரானுடனான போரின் தாக்கம் குறித்த தனது முதல் அறிக்கையை பென்டகன் கண்காணிப்பு அமைப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

இதில், இராணுவத்தின் நவீன ஆயுத இருப்புப் பற்றாக்குறை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானங்கள், தளங்கள் மற்றும் தூதரக மையங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் முதன்முறையாகப் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கை, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களில் ஈரான் நடத்திய தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் சேதமடைந்ததையும் அழிக்கப்பட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், கடந்த ஜூலை மாதம் இதுவரை ஈரான் போருக்கு 37.5 பில்லியன் டாலர் செலவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தப் போரினால் ஏற்பட்ட மொத்தச் செலவு 113 மில்லியன் டாலர் என்று வெளியுறவுத் துறை ஜூன் மாதத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. இதில் சுமார் 80 மில்லியன் டாலர் அவசரக்கால நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வந்த வாரங்கள் மற்றும் மாதங்களில், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்த சுமார் 9,000 அமெரிக்கக் குடிமக்களை ட்ரம்ப் நிர்வாகம் அங்கிருந்து வெளியேற்றி தாயகம் அழைத்து வந்தது என்று வெளியுறவுத் துறை குறிப்பிட்டிருந்தது.

ஈராக், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரக வசதிகள் ஈரானியத் தாக்குதல்களால் சேதமடைந்தன என்றும், இதன் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 17 ஆயிரத்து 62 கோடி என்றும் பென்டகன் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாத இறுதி வரை ஈராக் தூதரகம் 600-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும், இதனால் கிட்டத்தட்ட 157 மில்லியன் டாலர்கள் வரை செலவானதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியதாக அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.

கிட்டத்தட்ட 14.75 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இரண்டு ஈரானிய ஆளில்லா விமானங்கள் தாக்கியதில், சுமார் 11.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாகவும் துபாயில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் பயன்பாட்டுக் கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும் இதனால் கிட்டத்தட்ட 12,00,00 டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் பென்டகன் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கூடுதலாக, பாக்தாத், ஜெருசலேம், டெல் அவிவ், கெய்ரோ, அம்மான், குவைத் நகரம் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களில் உத்தரவிடப்பட்ட வெளியேற்றங்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட கட்டுமானத் திட்டத் தாமதங்களால், மாதத்திற்கு மதிப்பிடப்பட்ட 24.5 மில்லியன் டாலர்கள் செலவானதாகவும் பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஈரான் போரில் குறைந்தது 11 அமெரிக்க ராணுவப் பணியாளர்கள் போர் நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாகவும் , ஏழு பேர் போர் சாராத நிகழ்வுகளில் உயிரிழந்ததாகவும் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஈரான் தாக்குதல்களில் குறைந்தது 417 அமெரிக்க ராணுவத்தினர் காயமடைந்தனர் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளதாக பென்டகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னணிக் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்கள் முதல், வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், வான்வழி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள், மீட்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் வரை பல்வேறு வகையான விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது.

30 மில்லியன் டாலர் மதிப்புள்ள நான்கு F-15E ஒரு F-35A, ஒரு A-10, ஏழு KC-135, ஒரு E-3 Sentry விமானம் ஆகியவற்றை இழந்துள்ளது. ஒரு HH-60W ஹெலிகாப்டர்,240 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு MQ-4C Triton என்ற உளவு மற்றும் கண்காணிப்பு விமானம், நான்கு AH-6 ஹெலிகாப்டர்,ஒரு AH-64 அப்பாச்சி (Apache) ஹெலிகாப்டர், ஒரு MH-60S ஹெலிகாப்டர் மற்றும் 30 MQ-9 ரீப்பர் (Reaper) ட்ரோன்கள் ஈரான் தாக்குதலில் அழிந்து போனதாக பென்டகன் உறுதிபடுத்தியுள்ளது.

Tags: us iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran waramerica faces heavy lossheavy loss to usiran warStrait of HormuzIran-US wariran war news
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

Related News

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies