பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், பாஜக தேசியத் தலைவர் நிதின் நிபின் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும், பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்து கூறியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரதமருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
















