டெல்லியில் நிதியமைச்சர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் ஏற்பாட்டில் டெல்லி பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் நிதியமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கான நிதி மேலாண்மை என்ற தலைப்பில் தொடங்கியுள்ள மாநாட்டிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் உட்பட அனைத்து மாநில நிதியமைச்சர்களும், துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அமைச்சர் மரிய வில்சன் திருவள்ளுவர் சிலையை வழங்கினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மரியவில்சன், நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி, நிதிச் சவால்கள் மற்றும் கொள்கை முன்னுரிமைகள் குறித்து கருத்துமிக்க ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றதாக கூறியுள்ளார்.
















