பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்…
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஸ்ரீவில்லிபுத்துாரில் குண்டு வெடிக்கும் என இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மிரட்டல் விடுத்த இருவரும் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டது மர்மமாக உள்ளது எனவும். தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த சிலர் துாண்டிவிடுகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது எனவும் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இத்தகைய அலட்சியமே கோவை தொடர் குண்டு வெடிப்பு முதல் பல கொடூர கொலைகளுக்கு காரணமாக இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்…
அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் என எச்சரித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்.
















