திருப்பரங்குன்றம் தீப வழக்கு - மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
Aug 4, 2026, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 4, 2026, 07:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், வழக்கமான இடங்களைத் தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் , ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீபத்தூணில் தீபம் ஏற்ற ஜனவரி மாதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில் 6 மாதம் கழித்து அப்பீல் செய்வது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு தாமதம் ஆனதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், எதிர்மனுதாரர்களை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

Tags: Rama Ravikumasupreme courttamilnadu governmentpawan kalyan in Thiruparankundram.templeMadurai bench of the High CourtThiruparankundram deepam case
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

Next Post

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Related News

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies