ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுதீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
எஸ். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், தாயார் சங்கீதா, தந்தை விஜய் மற்றும் தங்கை திவ்யா சாஷாவுக்கு நன்றி தெரிவித்தார். முதலமைச்சரான தந்தைக்கு நன்றி என ஜேசன் கூறியவுடன் அரங்கம் அதிர்ந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















