இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க வழிவகை செய்யும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.
ரஷ்ய எரிசக்தித் துறையை இலக்காகக் கொண்டு அமெரிக்கா பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அச்சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனால் அடுத்த 30 நாட்களில் இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















