தமிழக சட்டப்பேரவை தேர்தல் - பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!
Oct 8, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 4, 2026, 04:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் குறித்து தற்போது காணலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரைவிட 20 ஆயிரத்திற்கும் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றார்.

இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியிலும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று விஜய் வெற்றி பெற்றார். கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளரான வி.எஸ்.பாபு, திமுக தலைவர் ஸ்டாலினை எட்டாயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தவெக வேட்பாளரான செல்வம், திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலினை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆனந்த், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை தோற்கடித்தார்.

வில்லிவாக்கம் தொகுதி தவெக நட்சத்திர வேட்பாளரான ஆதவ் அர்ஜூனா, திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனைவிட 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எழும்பூர் தனி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ராஜ்மோகன், திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னாவை 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி தவெக வேட்பாளரான ஜேசிடி பிரபாகர், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனை தோற்கடித்தார். அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்ட செங்கோட்டையன், திமுக வேட்பாளர் நல்லசிவத்தைவிட 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் அருண்ராஜ், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரைவிட நான்காயிரத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தவெக வேட்பாளர் நிர்மல் குமார், திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியைவிட 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீநாத், திமுகவின் கீதா ஜீவனைவிட 24 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பூர் வடக்கு தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா, அதிமுக வேட்பாளர் ஆனந்தனைவிட 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Tags: Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 20262026 tamil nadu assembly electionstamil nadu assembly elections newstvk star canditatesTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026
Share
Tweet
SendShare
Previous Post

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Next Post

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies