இந்தியா, சீனா எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், இணைப்பை மேம்படுத்தவும் இந்தியா ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் வேலை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான எல்லையில் அதன் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், இணைப்பை மேம்படுத்த, அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா-திபெத்-சீனா-மியான்மர் எல்லையில் இயங்கும் மூலோபாய எல்லைப்புற நெடுஞ்சாலையின் 11 வெவ்வேறு தொகுப்புகளுக்கு இந்திய அரசாங்கம் சுமார் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநில பொதுப்பணித் துறை, எல்லைச் சாலை அமைப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஆகிய மூன்று நிறுவனங்களால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஒரு உயர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
1,748 கிமீ இருவழி நெடுஞ்சாலை பல இடங்களில் சர்வதேச எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.
இந்த ஆண்டு ஏப்ரலில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும்.
“இந்த நிதியாண்டின் இறுதிக்குள், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் முழு வடகிழக்கு பகுதியிலும், கிட்டத்தட்ட 400 கிமீ தூரத்திற்கு இந்த மெகா சாலை திட்டத்தை ஏலம் விடுவோம் என்று தெரிவித்தார்.