தேசிய முகமை தேர்வு நிறுவனம் நடத்திய JEE முதன்மை தேர்வில் நெல்லை பாளையங்கோட்டை மாணவர் முகுந்த் பிரதீஷ் என்பவர், அகில இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2024 ஜனவரி மாதம் தேசிய முகமை தேர்வு நிறுவனம் ஜே.இ.இ. முதன்மை தேர்வை நடத்தியது. மொத்தம் 11 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினார். இதில், 70 ஆயிரத்து 48 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இவ்வாறு தேர்ச்சி பெற்ற மாணவர்களுள், அகில இந்திய தரவரிசையில் அதாவது 300-க்கு 300) மதிப்பெண் பெற்றவர்கள் 23 பேர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ்-ம் ஒருவர்.
மாணவன் முகுந்த் பிரதீஷ் தற்போது பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.