இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களின் சில்லறை விற்பனை, கடந்த ஜனவரி மாதத்தில், 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருசக்கர வாகனங்கள் விற்பனை 15 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 37 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் விற்பனை 13 சதவீதமும், டிராக்டர்கள் விற்பனை 21 சதவீதமும், வர்த்தக வாகனங்கள் விற்பனை 0.1 சதவீதமும் விற்பனை அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு கூறியிருப்பதாவது: கிராமப்புற சந்தை பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கான வலுவாக உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் 3 இலட்சத்து 93 ஆயிரத்து 250 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாத விற்பனை சாதனையை இது முறியடித்துள்ளது. டிராக்டர் பிரிவின் விற்பனை முந்தைய மாதங்களில் மந்த நிலையில் இருந்த நிலையில், தற்போது விற்பனை அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.