10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அதிகாரகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பழைய பென்சன் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகக் கூறிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், நிறைவேற்றவில்லை.
இதனால், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் தி.மு.க அரசு சார்பில், அமைச்சர்கள் நேற்று (பிப்.13) -ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். மேலும், நிதி நிலைமை சரியானவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதை ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். திட்டமிட்டபடி பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள ஜாக்டோ ஜியோ மூத்த நிர்வாகிகள், தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் அமைச்சர்கள் நேற்று (பிப்.13) -ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் வெளியிட்ட பத்திரிகை செய்தியினை ஜாக்டோ ஜியோ முற்றிலுமாக நிராகரிக்கிறது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்தவுள்ள வேலைநிறுத்த அறிவிப்பினை, தமிழக முதலமைச்சர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசி வாழ்வாதாரக் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் முடிவினை அறிவிக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.