நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “ஒரே நாடு ஒரே தேர்தல்“ குறித்து முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி எழுதிய சுயசரிதையை கூட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானங்களை யோசனை இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்.
மேலும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தற்போதைக்கு சாத்தியக்கூறுகள் இல்லையென்றாலும், அது கண்டிப்பாக நடக்க வேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரே நேரத்தில் அதிகரிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது.
இன்றைக்கு ஒரு எம்.பி., 20 லட்சம் பேரை பார்க்க முடியாது. சேவை செய்ய முடியாது.
ஒரு எம்எல்ஏ.,வுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட தொகுதியாக ஒதுக்கப்படுகிறது.
அவர்களாலும் பணி செய்ய முடியவில்லை. இதனால் அரசு ஸ்தம்பித்து
நிற்கிறது. எனவே உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 2026ம் ஆண்டுக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றே ஆக வேண்டும்; அதை தவிர்க்க முடியாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்தார். விவசாய பிரச்சனையை தீர்க்க கள்ளு கடைகள் தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்போம் என்று தெரிந்தும் ராகுல் காந்தி
நமது விவசாயிகளை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துகிறார். தமிழகத்தில் திமுக விவசாயிகளுக்கு அளித்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் போராட்டங்களைத் தூண்டுகிறது. திமுக வாக்குறிதியை முதலில் செயல் படுத்தட்டும், பின்னர் விவசாய போரட்டத்தை குறித்து திமுக பேசட்டும்.
14-02-1998 அன்று கோவை குண்டு வெடிப்பில் 68 பேர் பலியாகினர். இதில் 250 பேர் காயம் அடைந்தனர். கடந்த 2009 திமுக ஆட்சியில் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய 9 பேரை விடுதலை செய்தனர். இன்று 16 பேரை விடுதலை செய்ய வேண்டும் திமுக கங்கணம் கட்டி இருக்கிறார்கள். கடந்த வருடம் 2023 அக்டோபர் மாதம் உச்ச நீதமன்றம், இந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடையாது எனத் தெரிவித்தது. கேவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியை எந்தக் காரணத்தை கொண்டும் வெளியே விடக்கூடாது என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு எனத் உறுதிபடத் தெரிவித்தார்.