ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆசிய பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் ஆசிய அணிகளுக்கான சாம்பியன்ஷிப் 2016 முதல் தொடர் நடத்தப்படுகிறது.
இதன் ஐந்தாவது சீசன் பிப்ரவரி 12 ஆம் தேதி மலேசியாவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தமாக 15 அணிகள் பங்குபெற்றுள்ளன. இதில் இந்திய பெண்கள் அணி, ‘டபிள்யு’ பிரிவில் சீனாவுடன் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2023, பிரெஞ்ச் ஓபன் தொடரில் காயத்தால் விலகிய சிந்து, மீண்டும் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளார். இவரது தலைமையிலான அணியில் அஷ்மிதா, ஆசிய ஜூனியர் தொடரில் வெள்ளி வென்ற 15 வயது தான்வி, இரட்டையரில் அஷ்வினி-தனிஷா, காயத்ரி-திரீஷா ஜோடி இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனா வீராங்கனை ஹான் யுவுடன் விளையாடினார்.
இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 40 நிமிடத்தில் 21-17 21-15 என்ற புள்ளி கணக்கில் சீனா வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார். தற்போது இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.