இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அசாம் மாநிலத்தின் மிக உயரிய சிவிலியன் விருதான அசாம் பைபாப் விருது வழங்கப்பட்டது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா அவர்கள் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்துக்கொண்டார்.
அசாம் பைபாப் விருதுடன் ரூபாய் 5 லட்சம் ரொக்கம் வழங்கப்படும். மேலும், வாழ்நாள் முழுவதும் மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது. இது ஹாலோங் மரத்தின் இலையில் அசாமிய மொழியில் பொறிக்கப்பட்ட ஜாபி மற்றும் அசாம் பைபவ் உருவத்தைக் கொண்டுள்ளது.
அசாம் பைபாப் விருதைத் தவிர, அசாம் சௌரவ் மற்றும் அசாம் கௌரவ் விருதுகள் 21 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில், அசாம் சௌரவ் விருது 4 பேருக்கும், அசாம் கௌரவ் விருது 17 பேருக்கும் வழங்கப்பட்டன.