CBSE 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
மத்திய மேல்நிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என தகவல் வெளியானது.
அந்த வகையில், CBSE 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1.30 மணிக்கு நிறைவடைய உள்ளது.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் ஏப்ரல் 2 -ம் தேதியும், 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் மார்ச் 13 -ம் தேதியும் நிறைவடைய உள்ளது.
மேலும், 10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 2 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும், மாணவர்கள் மத்தியில் பாரதப் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தி வருகிறார். பரிக்ஷா பே சார்ச்சா என்ற இந்த நிகழ்வு கடந்த 2018 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.