வயநாட்டில் மயக்க ஊசி செலுத்த சென்ற வனத்துறையினரை காட்டு யானை ஓடஓட விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், வயநாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இந்த தகவல் அக்கம் பக்கம் பகுதிகளுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேவர அஞ்சி வீட்டுக்குள் முடங்கினர்.
இந்த நிலையில், அங்கிருந்த ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், வயநாடு பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். காட்டு யானையை உடனே பிடிக்கவேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதை அறிந்த காட்டு யானை வனத்துறையினரை ஓடஓட துரத்தியது.
அப்போது, சத்தம் எழுப்ப துப்பாக்கியால் சுட்டபடியே ஓடியதால் மயிரிழையில் வனத்துறையினர் உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.