சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.45 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 480 குறைந்து ரூ. 46 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு மேலும், ரூ.80 குறைந்து, ரூ.45 ஆயிரத்து 920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து, ரூ. 5 ஆயிரத்து 740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.11 குறைந்து, ரூ.6 ஆயிரத்து 262-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 50 காசுகள் உயர்ந்து, ரூ.76-க்கும், ஒரு கிலோ ரூ. 76 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.