தென்கொரியா நாட்டில் குழந்தை பெற்று கொண்டால் தங்கள் ஊழியர்களுக்கு பணம் தருவதாக ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் கடந்த சில வருடங்களாகவே பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அந்நாட்டின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும்படியாக தென் கொரியாவின் BOOYOUNG என்ற நிறுவனம் குழந்தை பெறுவதற்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதாவது, ‘நம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 1 குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.62.3 லட்சம் வழங்கப்படும்’ ($75,000) என்ற அறிவிப்பு வெளியிட்டு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் லீ , “குழந்தைகளை வளர்க்க நிறைய செலவாகும் என்பதால்தான் பலரும் குழந்தைப் பெற்றுக்கொள்வதில்லை. ஆகவே நாங்கள் அளிக்கும் நிதி உதவி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் எங்கள் நிறுவனம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் கருவியாகவும் நாட்டின் எதிர்காலத்தை சூழ்ந்துள்ள கவலைகளை சரி செய்யயும் வகையிலும் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்று 2021 ஆம் ஆண்டு முதல் குழந்தை பெற்ற ஊழியர்களுக்கு ரூ. 43.5 கோடியை பிரித்து தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்கீழ் சுமார் 70 குழந்தைகள் பயன்பெறுவர் என தெரிகிறது. இதேபோல 3 குழந்தைகள் பெற்றால், 1.86 கோடி ($2,25,000) தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.