5-வது மகளிர் புரோ ஹாக்கி லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் நெதர்லாந்து அணி 0-1 கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
5-வது மகளிர் புரோ ஹாக்கி லீக் தொடர் 9 அணிகளுக்கு இடையே பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
சில லீக் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் சீனா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி நேற்றிரவு நடந்த போட்டியில் ‘நம்பர் ஒன்’ அணியான ஒலிம்பிக் சாம்பியன் நெதர்லாந்துடன் விளையாடியது.
இந்த போட்டியில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் இந்தியாவின் 5-வது தோல்வி இதுவாகும். இந்த தொடரில் இந்திய அணி நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.