டிஸ்னிலேண்ட் கதாபாத்திர கலைஞர்கள், ஒரு தொழிற்சங்கத்தை தொடங்கும் தங்களின் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
டிஸ்னிலேண்ட் நாடகத்தில் நடிக்கும் கலைஞர்கள் நாடக தொழிற்சங்க சங்கத்தை தொடங்கும் தங்களின் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மிக்கி மவுஸ், டொனால்ட் டக் மற்றும் கூஃபி போன்ற அனைவர்க்கும் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் அனைவரும் இந்த தொழிற்சங்கத்தை தொடங்கும் தங்களின் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நடிகர்கள் சமபங்கு சங்கத்தின் தலைவரான கேட் ஷிண்டில், நடிகர்களுக்கு நியாயமான ஊதியம், தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கீகார அட்டைகளில் கையொப்பமிட்டவுடன் டிஸ்னி ரிசார்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் இருந்து தன்னார்வ ஒப்புதலைப் பெற தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளது.
இதை அந்த நிறுவனம் மறுத்தால், தேசிய தொழிலாளர் வாரியத்திடம்அவர்களின் செயல்பாடுகள் குறித்து மனு தாக்கல் செய்யப்படும் அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் சமபங்கு சங்கம், 51,000 க்கும் மேற்பட்ட நடிகர்கள் மற்றும் மேடை மேலாளர்களை கொண்டுள்ளது. அதேபோல், இது பொழுதுபோக்கு துறையில் உள்ள கலைஞர்களுக்கு நியாயமான ஊதியங்கள், இழப்பீடுகள், அவர்களின் போதிய வசதிகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.