இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் டக் அவுட் ஆகினார்.
தொடர்ந்து களமிறங்கிய ரஜத் படிதார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 33/3 என்ற கணக்கில் இருந்தது.
அப்போது தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா – ஜடேஜா கூட்டணி மிதமாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர்.
நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 14 பௌண்டரீஸ் 3 சிக்சர்கள் என 131 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய சர்பராஸ் கான் தனது அறிமுக ஆட்டத்தில் 62 ரன்களை அசத்தியுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்ககள் என இதுவரை 110 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்துள்ளது.