காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்து இருந்தது.
உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய சுற்றுலாத்தல பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து இருந்தது.
இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் முக்கிய சுற்றுலாத்தல பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது காஷ்மீரில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.
அதேபோல் காஷ்மீரின் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் ஆகும். அதனால்தான் இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தின் வைரக்கல் என போற்றப்படுகிறது.
இந்நிலையில் இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஏரியில் தற்போது சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை முதலே குளிரையும் பொருட்படுத்தாமல் தால் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.