லாரில் கடத்தி சென்ற ரூ. 1.736 கோடி மதிப்புள்ள 434 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திரிபுராவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ரூ. 1.736 கோடி மதிப்புள்ள 434 கிலோ கஞ்சாவை அசாம் ரைபிள் படையினர் பறிமுதல் செய்தனர்.
வடக்கு திரிபுரா மாவட்டம், சுரைபாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரைபாரி பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் அப்பகுதி காவல் துறையுடன் இணைந்து இந்த கஞ்சா பறிமுதலை செய்தனர்.
அந்த 434 கிலோ எடைகொண்ட இந்த கஞ்சா ரூ. 1.736 கோடி மதிப்புள்ளது என தெரியவந்துள்ளது. இந்த கடத்தல்காரர்கள் லாரியில் ஒரு பெட்டிக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளனர்.
இதை கண்டுபிடித்த அசாம் ரைபிள் படையினர் அந்த போதை பொருளை சுரைபாரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேற்கட்ட விசாரணைகளும் நடைபெற்று வருகிறது.