அமெரிக்கா ஹூதி இலக்குகள் மீது தற்காப்பு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணம் செய்யும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தல் செய்து வருகின்றனர். காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்ததைக் கண்டிக்கும் விதமாக இந்த தாக்குதல்களை நடத்துவதாக ஹூதி கூறுகிறது.
கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது உலக வர்த்தகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து ஹூதி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அமெரிக்கா ஹூதி இலக்குகள் மீது தற்காப்பு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மதியம் 1 மணி முதல் இரவு 7:30 மணி வரை தாக்குதல் நடைபெற்றது.
இத்தாக்குதலில், அமெரிக்க இராணுவப் படைகள் ஏழு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் (ASCM), மூன்று ஆளில்லா விமானங்கள் (UAV) மற்றும் ஒரு வெடிக்கும் ஆளில்லா மேற்பரப்புக் கப்பல் (USV) ஆகியவற்றை யேமனின் ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குறிவைத்தன.
இந்த நடவடிக்கைகள் சுதந்திரத்தை பாதுகாக்கும் என்றும் அமெரிக்க கடற்படையானது வணிக கப்பல்களுக்கு கடல் கடப்பதை பாதுகாப்பானதாக மாற்றும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.