தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகருக்கு தமிழக வனத்துறை அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
ஆனைமலை மலைத்தொடர் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பரவியுள்ள மலைத்தொடராகும்.
காடுகளை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம் ஆனைமலை புலிகள் காப்பகமாகும். ஒரு சில நாட்கள் தங்கி காடுகளின் அழகை ரசிப்பதோடு மனதிற்கும், உடலுக்கும் ஓய்வு கொடுக்க சிறந்த இடமாகும்.
பெரு நகரத்தின் இரைச்சலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த ஆனைமலை சரணாலயம் கோவை மாவட்டத்தில் உள்ளது. பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி ஆகிய 6 வனச் சரகங்களை உள்ளடக்கியது.
பொள்ளாச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சரணாலயம் இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் இது மிக முக்கியமான ஒன்றாகும்.
இங்கு, யானைகள், புலிகள், கரடி, நரி உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், 300 -க்கும் மேற்பட்ட பறவைகளும் வந்து செல்கின்றன.
கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை வனப்பகுதிக்குள் யானைகள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில், உயர் ஒளியுடன், ஆபத்தான முறையில் காரை ஓட்டி, யானையை விரட்டியுள்ளார் பிரபல அரசியல் பிரமுகரான மிதுன். மேலும், இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால், மிதுனுக்கு, ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது வனத்துறை.
வாகனத்தைக் கண்டு மிரண்டு ஓடும் யானையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மிதுன். அதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.