நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி வென்றது மூலம் 92 கால வரலாற்றை நியூசிலாந்து மாற்றியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 242 ரன்களை எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த நியூசிலாந்து 211 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸ் ஆரம்பம் ஆனது. 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 235 ரன்களை எடுத்தது. டேவிட் பெடிங்காம் 110 ரன்களை எடுத்தார்.
இதை தொடர்ந்து 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்தது. இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 133 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல் வில் எங் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இருந்தார். இதனால் நியூசிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
92 ஆண்டுகளாக நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெற்றதே இல்லை. ஆனால் இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி வரலாற்றை மாற்றியுள்ளது.