யு.ஜி.சி-யின் முதல்தர அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனம் சென்னை பல்கலைக்கழகம். நமது நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை அளவிடுவதற்காகவும், அதன் செயல்பாட்டை அடிப்படையில் தேசிய தர மதிப்பீடு அங்கீகாரக் குழுவால் தர மதிப்பீடு வழங்கப்படுகிறது.
கற்பித்தல், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு, இந்த மதிப்பீடு வழங்குகிறது. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ என்ற முதல்தர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகம் யுஜிசி முன் அனுமதியின்றிப் பட்டப்படிப்புக்கான திட்டங்களை வகுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, ரூ.100 கோடி வரையுஜிசி நிதியுதவியைப் பெற முடியும்.
இப்படிப் பெருமைமிகு, சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உளதால், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்குச் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பல்கலைக் கழகம், கடந்த 2017-18 முதல் 2020- 21 வரை ரூ.424 கோடி வரி நிலுவை வைத்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.