பஞ்சுமிட்டாயில், புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிபொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த பலர் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். அதில் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாயில் ரோடமின் பி என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்தது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும்.
இதனால், பிங்க் நிற பஞ்சுமிட்டாய்களில் நச்சுப்பொருள் கலப்பதாக ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பஞ்சு மிட்டாய் விற்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடை வித்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் வியாபாரத்தைத் தொடங்கலாம். அதுவரை பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள்மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.